ஹிந்தி எதிர்ப்பு ஏன் வருகிறது என்றால் ஹிந்தி திணிப்பு இருப்பதால் தான் நீட் எதிர்ப்பும் அப்படித்தான் இதே போன்று தான் இந்திய தேசத்தின் மகத்தான கூட்டாட்சி தத்துவத்திற்கு ஊறு செய்யும் கருத்தியலை ஒவ்வொரு மாநிலமும் எதிர்த்து வருகிறது சிவகங்கையை சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார் அவர் தெரிவித்த விவரம் பின்வருமாறு:
ஹிந்தி என்பது இந்தியாவில் பேசப்பட்டு வரும் ஆயிரத்தி சொச்சம் மொழிகளில் ஒன்றுஅது தேசிய மொழி அன்றுஅது தேசத்தை ஒன்றிணைக்கும் மொழியும் அன்றுமாறாக தேசத்தை தேவையற்று பிளவு படுத்தும் நோக்கில் அந்த மொழியை யார் மீதும் திணிப்பது தவறு.
உலகின் அனைத்து நாடுகளிலும்அறியப்பட்ட / தகவல் பரிமாற்றத்துக்கு உதவக்கூடிய மொழியாக ஆங்கிலம் இருக்கிறதுஅவரவர் தாய் பிறப்பில் இருந்து தாலாட்டி பாட்டுப்பாடி வளர்த்த காலத்திலிருந்தே ஊட்டப்பட்ட மொழியாக தாய் மொழி இருக்கிறது.
எனவே தாய்மொழிக்கல்வியும் ஆங்கிலமும் கட்டாயம் இவ்வுலகில் நமக்கு தேவை .எப்போதும் மொழியை அறிந்திருப்பது அறிவாகாது என்பதையும் பதிவு செய்கிறேன்இவையன்றி வேறு ஒரு மொழி தேவையென்றால் அதை அவரவர் மனமொப்பிக்கற்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
மேலும் ஒரு மாநிலத்தை அல்லது ஒரு நாட்டை நம்பி அங்கு நாம் பொருள் ஈட்டச்செல்கிறோம் என்றால் அங்கு உள்ளவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய அந்த மொழியை அறிந்து கொள்வது தேவையானதாகிறது.
இதை அந்த மாநிலத்திற்கோ அந்த நாட்டிற்கோ சென்ற சில நாட்களில் சில மாதங்களில் கற்றுக்கொள்ள முடியும்.நம்மில் பலரும் அவ்வாறு தான் உலகம் முழுவதும் சென்று வாழ்ந்துப்ரெஞ்சு,ஸ்பேனிஷ்,அரபி,சப்பானிய மொழி,மாண்டரின்,மலாய்
ஹிந்தி,மலையாளம், தெலுங்கு,மராத்தி,பங்காளிஎன்று பேசி அசத்துகின்றனர்இதில் இருந்து என்ன தெரிகிறது?தேவைப்பட்டால் யார் வேண்டுமானாலும் சரிஇதற்கு கல்வித்தகுதியெல்லாம் தேவையில்லை .
கற்றவர் கல்லாதவர் வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும் அந்த மாநிலத்திற்கோ நாட்டிற்கோ சென்றால் தானாக அந்த மொழியை உள்வாங்கி பேச ஆரம்பித்து விடுவார்கள்.இதுவே உண்மை இதை அனைவரும் ஒப்புக்கொள்வோம் என்றே நம்புகிறேன்ஆனால் இந்தியாவில் தான்ஹிந்தி என்றொரு மொழியை உயர்த்திப்பிடித்துஅதை தேசிய மொழி என்று பலரையும் நம்ப வைத்துஅதன்மூலம் ஒற்றுமையை உருவாக்குகிறோம் என்று நினைத்துதேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் செயல் தான் நடந்து கொண்டிருக்கிறது.
ஹிந்தி பிரச்சார சபா என்ற பெயரில் ஹிந்தியை பள்ளிகள் தோறும் அலுவலகங்கள் தோறும் திணிக்க முற்படும் போது ஒவ்வாமை ஏற்படுகிறது.
அந்த மொழி மீது வெறுப்பு ஏற்படுகிறது.மேலும் அந்த மொழியை திணித்து மறைந்து போன பல மாநில மொழிகளைக் காணும் போது நமக்கும் நமது மொழிக்கும் அதே நிலை ஏற்பட்டு விடுமோ என்ற ஐயமும் அச்சமும் பல மாநில மக்களிடையே ஏற்படுகின்றது.
என்னைப்பொறுத்த வரைநான் இங்கிருந்த வடக்கு நோக்கி சென்றால்அங்கு சென்று வாழ வேண்டிய நிலை வந்தால் கட்டாயம் அங்கு சென்று ஹிந்தி கற்றுக்கொள்வேன்
கேரளா சென்று வாழ நேர்ந்தால் மலையாளம் கற்பேன்ஆந்திராவென்றால் தெலுங்கு கற்பேன்இது எனது தேவைகள் பொருத்தது.அடுத்து சிபிஎஸ்சி என்ற ஒற்றைக்கல்வி முறையை ஏதோ அது தான் ஸ்டாண்டர்டு கல்வி முறை போல அனைத்து பள்ளிகளிலும் புகுத்தும் திணிக்கும் வேலையும் நீட் உபயத்தால் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த கல்வி முறைக்கு NCRTE என்று முலாம் பூசி வெளியே தெரியாமல் திணிக்கிறார்கள்.
ஆனாலும் அது தான் உலகிலேயே சிறந்த முறையா என்று பார்த்தால் அதுவும் இல்லை
காரணம் NCRTE சிலபசை சிபிஎஸ்சி பள்ளிகளில் எல்கேஜியில் இருந்து படிக்கும் மாணவர்களால் தனியாக கோச்சிங் இல்லாமல் JEE அல்லது NEET தாண்ட முடியாது .இதுவே நிதர்சனம்எதையோ செய்யப்போய்எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.
நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்ட பல வழிகள் உள்ளன.நிச்சயம்ஒரே மொழிஒரே சிலபஸ்ஒரே பரீட்சை என்று சென்றுகொண்டிருப்பதுகூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக தோன்றுகிறதுஇந்திய ஒற்றுமை ஓங்குககூட்டாட்சி வாழ்க.
ஜெய்ஹிந்த்