மன்னார் வளைகுடா கடற் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீனவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கீமி வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்களுக்கு தூத்துக்குடியில் மீன்துறை இயக்குநர் அலுவலகத்தின் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில், கடலுக்குள் பலத்த காற்று வீசுவதால் மீன்பிடித்தொழிலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டும் எனவும் மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினையடுத்து மீனவர்கள் யாரும் மீன்பிடித்தொழிலுக்கு செல்லாத காரணத்தினால் படகுகள் அனைத்தும் இன்று கரையில் நிறுத்தப்பட்டு, வெறிச்சோடி நிலையில் தூத்துக்குடி துறைமுகம் காட்சியளிக்கிறது.