தமிழ் நாட்டில் கொரோனா நோய் மிகவும் வேகமாக பரவி வருகிறது.கொரோனா நோய் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வந்தது.
நெருங்கிய உறவினர்களின் திருமணம், மரணம், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர்களுக்குத் திரும்புதல் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது.
இந்த இ-பாஸ் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் இடைத்தரகர்கள் இதில் நிறைய பேர் ஈடுபடுவதாகவும் உண்மையாக இ -பாஸ் விண்ணபிப்பவர்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன இந்நிலையில், இன்று முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எவ்வித தாமதமும் இன்றி இ-பாஸ் வழங்க வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் இந்த முறையை பொறுப்புடன் பயன்படுத்தி, தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் இருக்கும் இ-பாஸ் முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.