தமிழகத்தில் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அனுமதி அளித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலப்படுத்தப்பட்ட ஊரடங்கில், படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடைகள் இரவு 9 மணிவரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கடைகளை கூடுதல் நேரம் திறக்க அனுமதி அளித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு 9மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அளிக்கபட்டு இருந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் உள்ள கடைகள் இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம். பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் இடையே, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.