சென்னை: தமிழகத்தி கல்லூரிகளுக்கான இறுதியாண்டு பருவத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென உயர் கல்வித் துறை அமைச்சர் கே பி அன்பழகன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஊஹான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனவைரஸ் இன்று உலக நாடுகள் எங்கும் பரவி மனித பேரழிவுகளையும் பொருளாதர நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தன. கொரோனா என்னும் கொடிய வைரஸ் சமூக பரவலாக மாறிவிட கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனவைரஸ் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சிறு புள்ளியாக ஆரம்பித்த இந்த வைரஸ் இன்று சற்றே திரும்பி பார்க்க முடியாத வகையில் நாடெங்கும் பரவி வருகிறது. உச்ச கட்டமாக ஒரே நாளில் இந்தியாவில் 78, 761 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு முன்னதாக இதே போன்று அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் 17 ம் தேதி ஒரே நாளில் 77,368 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
பல உலக நாடுகளை போலவே இந்தியாவும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் ஊரடங்கு அமல் சட்டத்தை கையில் எடுத்தது. இதன் முதற்கட்டமாக கடந்த மார்ச் 22 ம் தேதி 14 மணி நேர ஊரடங்கு பிரதமர் மூலமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது, பின்பு அது 21 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 14 ம் தேதி முதல் மே 3 ம் தேதி வரை ஊரடங்கிற்க்கான அமல் சட்டம் கொண்டு வரப்பட்டது. மே மாதம் முழுவதும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் முதல் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல தளர்வுகளுடனான ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வியும் கேள்விக்குறியானது. பல தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் அரசால் ரத்து செய்யப்பட்டது. இறுதியாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்படவேண்டும் என்று பல மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.
இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே. பி அன்பழகன் நேற்று சென்னையில் கூறியது: உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். தமிழகத்தில் கல்லூரிகளுக்கான பருவத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுகளை எந்த முறையில் எப்போது நடத்துவது என்பதை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. மேலும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய ஓரிரு நாளில் உயர் கல்வி துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்படும்.