தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பால் 107 பேர் மட்டும் உயிரிழந்த நிலையில், இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 6839 ஆக உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் 20 பெரும், கோவையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. அதிக்கபட்சமாக,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 606 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 060 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,137 பெருக்கும், கோவையில் 359 பெருக்கும், கடலூரில் 333 பேருக்கும், செங்கல்பட்டில் 319 பேருக்கும், திருவள்ளூரில் 304 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.