சீர்காழியில் நகைவியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்துவிட்டு 16 கிலோ நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி :
மயிலாடுதுறை சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வருபவர் சேர்ந்தவர் தன்ராஜ். வடநாட்டை சேர்ந்த இவர் அதேபகுதியில் அடகுக்கடை மற்றும் மொத்த நகை வியாபாரியாகவும் இருந்து வருகிறார். தன்ராஜ் தனது மனைவி ஆஷா மற்றும் மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோர் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இன்று தீடிரென தன்ராஜ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அதிகாலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்த 4 பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலில் தன்ராஜின் மனைவி ஆஷா மற்றும் மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தன்ராஜும் அவரது மருமகள் நிகில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Read more – மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற தடை நீக்கம் : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி
மேலும், தன்ராஜ் வீட்டில் இருந்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு அவரது வீட்டில் இருந்த காரையும் மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் வடநாட்டை சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தங்க நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். எருக்கூறில் மற்ற 2 கொள்ளையர்களை பிடித்து அவர்களிடமிருந்து 17 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்கள் 3 பேரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.