கேரள எல்லையில் வீட்டின் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனச்சமோடு :
தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைத்துள்ள பனச்சமோடு புலியூர் சாலையில் கோபி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உள்ள நீரை அக்குடும்பத்தினர் குடிநீராக பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே கிணற்று தண்ணீரில் இருந்து திடீரென பெட்ரோல் வாசம் வீசியதால் சந்தேகம் அடைந்த கோபி ஒரு வாளி தண்ணீரை எடுத்து தீயை பற்ற வைத்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக வாளியில் இருந்த தண்ணீர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபி, வீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கிணற்றுத் தண்ணீர் எப்படி பெட்ரோல் நறுமணம் மற்றும் தீப்பிடித்து எரிகிறது என்று விசாரித்தபோது கோபியின் வீட்டுக்கு அருகிலுள்ள தனியார் பெட்ரோல் பங்கில் உள்ள பெட்ரோல் சேமிப்புக் கலன் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து கசிந்து கிணற்று நீரில் கலந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read more – மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் : திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இதுகுறித்து கோபி கன்னியாகுமரி மாவட்ட பலுகல் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த சம்பம் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.