மத்திய அரசு புதிதாக கொண்டு வரும் கல்விக் கொள்கை 2020 குறித்து விமர்சனங்களும் விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது உயர்கல்வித் மற்றும் பள்ளிக்கல்வித் துறைகளின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கல்விக் கொள்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதன் பின்பு புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பள்ளிகள் திறப்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.