தி.நகரிலுள்ள நடிகர் சங்க அலுவலகம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை:
சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இன்று காலை 6 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் இதுகுறித்து தியாகராய நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தின் காரணமாக தென்னிந்திய நடிகர்கள் சங்க அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
தியாகராய நகரில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.




