தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு 40 வயது மதிக்கத்தக்க வெற்றிமாறன் என்ற நபர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவரை முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எதற்காக அந்த நபர் தீக்குளித்தார் என்று விபரம் தெரியவில்லை.
முதலமைச்சர் வீட்டின் முன் இன்று காலை மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்த வெற்றிமாறன் யார் என்பது குறித்தும், எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.