இலங்கை கடற்படையால் எரித்து கொல்லப்பட்ட நான்கு மீனவர்களின் உடல்களை இலங்கை அரசு இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.
கொழும்பு:
தமிழக மீனவர்கள் இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இறந்த 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை கடற்கரையில் ஒதுங்கின. இலங்கையின் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, காங்கேசன் துறை கடற்படை முகாமில் நேற்றிரவு கொண்டு வரப்பட்டது.
Read more – முதல் முறையாக அமெரிக்காவில் பாதுகாப்பு அமைச்சராக கறுப்பினத்தவர் : ஜோ பைடன் அறிவிப்பு
கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் 4 மீனவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இந்திய கடற்படையிடம் 4 மீனவர்களின் உடல்கள் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பேரின் உடல்களும் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து 7.20 மணிக்கு கப்பல் புறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 4 மீனவர்களின் உயிருக்கு நீதி கிடைக்கும் வரை இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.