பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. மேலும், இந்தாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தநிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு :-
- இயற்பியல், வேதியல், கணிப்பொறியியல், தாவரவியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ம் தேதி நடைபெறும்.
- செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- ஆய்வக அறையில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் அருகில் சானிடைசர் வைக்கக்கூடாது.
- கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு குணமடைந்த பின் தனியாக செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்.
- நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகில் செய்முறை தேர்வுகள் நடைபெறும் பள்ளிகள் இருந்தால் வேறு பள்ளிகளுக்கு தேர்வுகள் நடத்தி கொள்ளலாம்.
- கொரோனா பரவலை தடுக்க செய்முறை கூடத்தில் PIPETTE பதிலாக BURETTE பயன்படுத்தி கொள்ளலாம்.
- மாணவர்கள் கிருமிநாசினி சானிட்டைசர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துகொள்ளவேண்டும்.
- முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.