சென்னை: சென்னையை சேர்ந்த இளைஞர், தண்ணீர் என்று மதுவில் ஆசிட் கலந்து குடித்ததன் காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வால்டாக்ஸ் பகுதியினை சேர்ந்தவர் 24 வயதான கவுதம் என்ற இளைஞர், தொடர்ந்து மது அருந்தியதன் காரணமாக, போதையில் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டினை மதுவில் கலந்து குடித்துள்ளார். இதனையடுத்து வலியினால் துடித்த இளைஞரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதனையடுத்து மது அருத்தியிருந்த நிலையிலும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் துர்திஷ்டவசமாக 24 வயதான கவுதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனாவிற்கு பலர் உயிரிழந்து வரவக்கூடிய நேரத்தில், மதுப்போதையில் இளைஞர் செய்த இந்த செயல் அப்பகுதி மக்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.




