பேஸ்புக்கில் பழகி ஏராளமான பெண்களிடம் ஆபாச புகைப்படங்களை பெற்று பின்னர் மிரட்டி பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக். 12ஆம் வகுப்பு வரை படித்தவிட்டு சமையல் வேலை செய்து வருகிறார். முகநூலில் இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பாக பழகி உள்ளார். பின்னர் காதலாக மாறியதை தொடர்ந்து அந்த மாணவி குளிக்கும் வீடியோ காட்சிகளை செல்போனுக்கு அனுப்ப சொல்லி பதிவு செய்து கொண்டார். அந்த வீடியோவைக் காட்டி படிப்பு செலவுக்கு பணம் தேவை என 10,000 ரூபாயை வாங்கி உள்ளார். அதன்பிறகு 10,000 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனை தர மறுத்த அந்த மாணவி தந்தையிடம் புகார் கூறியதால் கார்த்திக் உடனடியாக அவரது தந்தைக்கு போன் செய்து 50000 ரூபாய் தரவில்லை என்றால் மகளின் ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவியின் தந்தை புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கார்த்திக்கின் முகநூல் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு அவர் கூவத்தூரில் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்தனர். இவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் முகநூலில் பழகி ஆபாச படங்களை பெற்று மிரட்டி பல ஆயிரம் ரூபாய் பறித்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது புகார் தெரிவித்தால் அதற்கும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.