7 தமிழர்கள் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்துவது இரக்கம் இல்லாத செயல் என்று துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை, எதிர்கட்சி துணைத் தலைவரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்துவது கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத செயல். பொதுப்பணித் துறை, நெடுஞ் சாலைத் துறை என்பது அதிகாரிகள் தூங்கினாலும் அமைச்சர் தூங்கக் கூடாது என்று அவர் கூறினார்.