நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நிவர் புயல்
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில்,சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
இதையடுத்து, கனமழை பாதிப்பு உள்ள சென்னை உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
13 மாவட்டங்களுக்கு விடுமுறை
சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாளையும் பொது விடுமுறை தொடரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.