கொரோனா தொற்று பரவல் காரணமாக பல பள்ளி மாணவ,மாணவிகள் ஸ்மார்ட் போன் இல்லாமல் ஆன் லைன் வகுப்புகளில் பாடம் கற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு,போடப்பட்ட ஊரடங்கினால் பல எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் கேள்விக்குறி ஆனது.இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து கேள்வி எழுந்தது.தமிழக அரசு சார்பாக பள்ளிகளுக்கு அளித்த உத்தரவின் பெயரில் மாணவ,மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த உத்தரவு விட்டது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வழியாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செல்போன் வசதி, தொலைக்காட்சி வசதி இல்லாததால் பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடர முடியாத நிலை உள்ளது.உளுந்தூர்பேட்டையில் நித்யஸ்ரீ என்ற மாணவி ஆன்லைன் வகுப்பிற்கு ஆன்ட்ராய்டு போன் இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னரே அனைத்து பள்ளி மாணவர்கள் வீடுகளிலும் ஆன்ட்ராய்டு போன் இருக்கிறதா?அப்படியே இருந்தாலும் அவர்களின் வீடுகளில் இணையசேவைக்கான பணம் மாதாமாதம் செலுத்தும் வசதி உள்ளதா? ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்கள் எப்படி ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துவார்கள்?என்று தமிழக அரசு எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் இருந்ததே நித்யஸ்ரீ மரணத்திற்கு காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், ஷாம் வேல் என்ற 11 ம் வகுப்பு படிக்கும் மாணவன், தந்தை லூக்கா ராஜ் இவர் ஒரு ஆட்டோ டிரைவர்,தாய் ரபிக்கா. இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் துப்புரவு பணி செய்யும் தொழிலாளி,இவர்களது வீட்டில் ஷாமிருக்கு சீபா என்ற ஒருஅக்கா.இவர் 12 ம் வகுப்புபடித்து வருகிறார், மேலும் ஒரு தங்கை சலோமியும் உள்ளனர்.வீட்டில் மூன்று பேரும் பள்ளி படிப்பை ஆன்லைன் வகுப்புகளில் தொடர்வதால் , அப்பாவின் ஒரு ஸ்மார்ட் போனில் பள்ளி பாடங்களை கவனிக்க இயலாத நிலை நிலவி வந்துள்ளது.அப்பாவிடம் கூடுதலாக ஒரு ஸ்மார்ட் போன் கேட்டும் வறுமையின் காரணமாக அதற்கும் வாய்ப்பில்லை. தீடிரென ஒரு முடிவு எடுத்த ஷாம் இந்த கொரோனா நேரத்தில் பகுதி நேரம் வீட்டுக்கு தெரியாமல் வேலை பார்த்து, அதில் வரும் பணத்தை வைத்து கொண்டு நம் 12ம் வகுப்பு படிக்கும் அக்காவிற்கு ஒரு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.செய்யும் தொழிலே தெய்வம் என்று சாலை ஓரங்களில் உள்ள பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியை தொடர்ந்தார்.

இதை அறிந்து பிரபல நாளிதழ் ஒன்று ஷாமின் புகைப்படத்துடன் கூடிய ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதை படித்து தெரிந்து கொண்ட தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவரது அலுவலகத்தில் இருந்து ஷாமை அழைத்துள்ளார். அதன் பிறகு ஷாமின் குடும்பநிலை பற்றி விசாரித்த உதயநிதி ஸ்டாலின் புது மடிக்கணினி ஒன்றை தி.மு.க சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.




