தமிழகத்தில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.
தமிழகத்தில் தினமும் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது எண்ணிக்கையை உயர்த்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரத்து 900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் காணப்படும் 3,797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
Read more – வேளச்சேரி 92 வது வாக்குச்சாவடியில் மறுவாக்குபதிவு : தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
மேலும், தடுப்பூசி திருவிழா காரணமாக சுமார் 4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும் என்றும், இதை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.