கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்த வேடசந்தூர் அதிமுக எம் எல் ஏ பரமசிவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் கரோனா வைரஸ் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,வும் டாக்டருமான பரமசிவம் மைக் பிடித்து பேசி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் டாக்டர் பரமசிவம். வேடசந்தூர் தொகுதி முழுவதும் கிராமப்புறங்களால் ஆனது.
இதனால் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இதையறிந்த எம்.எல்.ஏ.,வும் டாக்டருமான பரமசிவம், கிராமம் கிராமமாகச் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது போல் கரோனா குறித்த விழிப்புணர்வை மைக்கில் பேசி ஏற்படுத்திவருகிறார்.
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்செய்தியாளருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், வேடசந்தூர் தொகுதி முழுவதும் கிராமப்புறங்கள் நிறைந்தது.
இதனால் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் கிராமம் கிராமமாக சென்று மக்களை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றேன்.
நான் ஒரு டாக்டர் என்பதால் இந்த கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்து முழுமையாக அறிந்தவன் என்பதாலும் மக்கள் எனது பேச்சை கேட்கின்றனர்.
எம்.எல்.ஏ., என்பதுடன் ஒரு டாக்டராக என் தொகுதி மக்களின் நலனை காக்க முயற்சி மேற்கொண்டு வருகிறேன். வல்லரசு நாடுகளை திணறிவரும் நிலையில் நாம் தனித்திருப்பதன் மூலம் மட்டுமே கரோனாவை வெல்ல முடியும் என கிராமமக்களிடம் எடுத்துக்கூறி வருகிறேன்.
இந்நிலையில் பரமசிவம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.