வடதமிழக உள் மாவட்டங்களில் வருகிற 2ஆம் தேதி வரை அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 31.12.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.