கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் தனிப்பட்ட பயிற்சியாளரான அன்ஷுகா பர்வானி, மாதவிடாய் வலியைப் போக்க உதவும் யோகாசனங்கள் பற்றி கூறுகிறார்.
பெண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி. சில பெண்களுக்கு மாதவிடாய் 4 முதல் 7 வரை நீடிக்கும். இந்த நேரத்தில் சிலர் எரிச்சலான மனநிலையை அனுபவிப்பார்கள். ஒரு சிலரோ வயிறு மற்றும் முதுகு வலி தாங்க முடியாமல் படுக்கையை விட்டு எழவே மாட்டார்கள்.
இனி இந்த வலி இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், எந்த பணியில் இருந்தாலும் சில ஆசனங்களை மட்டும் வழக்கமாக செய்துவருவதற்குப் பரிந்துரைக்கிறார் கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் தனிப்பட்ட பயிற்சியாளரான அன்ஷுகா பர்வானி. இதுக்குறித்து இன்ஸ்டாவிலும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் என்ன சொல்லி இருக்கிறார் என நாமும் தெரிந்துக்கொள்வோம்.
மாதவிடாய் வலியைப் போக்க உதவும் யோகாசனங்கள்:
பட்டாம்பூச்சி ஆசனம்: நீங்கள் பட்டாம்பூச்சி ஆசனம் செய்யும் போது உங்களின் கருப்பையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஆசனத்தைத் தொடங்கும் போது முதலில், தரையில் கால்களை நீட்டியவாறு அமர்ந்துக்கொண்டு இரு கால்களையும் மடக்க வேண்டும். பின்னர் கால்களின் பாதங்கள் ஒன்றோடொன்று ஒட்டிய நிலையில் நேராக இருக்கச் செய்து பாதங்களின் மீது கைகளை வைத்து பட்டாம்பூச்சி பறப்பது போன்று செய்ய வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை மேற்கொள்ளும் போது, உடலுக்குத் தேவையான இரத்த ஓட்டம் கிடைப்பதோடு, சோர்வு மற்றும் சோம்பலைக் குறைக்கிறது. முதுகெலும்பு வலியையும் போக்குகிறது.
வைட்-ஆங்கிள் சீட்டட் ஃபார்வர்டு வளைவு(Wide-Angle Seated bose): இந்த ஆசனத்தைச் செய்யும் போது முதலில் தரையில் அமர்ந்து உங்களது கால்களை நேராக நீட்டி அமர வேண்டும். பின்னர் நடுவில் கைகளுக்கு சப்போர்ட் கொடுக்கும் வகையிலான ஒரு பொருளை வைத்து குனிய வேண்டும். இவ்வாறு நாம் முதுகு மற்றும் கழுத்து பகுதியை முன்னோக்கி வளைக்கும் போது நமது உடலில் முதுகெலும்பு வலியைக் குறைக்கிறது. இதனால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க முடியும்.கார்லண்ட் போஸ் (Garland Pose): நாம் வழக்கமாக கால்களை மடக்கி உட்காரமால் குத்தவைத்து உட்காரும் ஆசனம் தான் கார்லண்ட். இவ்வாறு செய்யும் போது இடுப்பு பகுதியில் ஏற்படும் இறுக்கத்தைத் தடுக்க உதவுகிறது.லெக்ஸ்-அப்-தி-வால் (Legs-Up-the-Wall): மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தலைவலியைப் போக்குவதற்கு உதவும் ஆசனங்களில் ஒன்றாக உள்ளது விபரீத கரணி எனப்படும் லெக்ஸ் அப் தி வால். இந்த ஆசனத்தை செய்யும் போது முதலில் நேராக படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரு கால்களையும் மேல் நோக்கி வைத்து சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்தால் போதும். முதுகு வளையும் போது வலி ஏற்படாது.
கடைசியாக சாய்ந்த பட்டாம்பூச்சியின் தோற்றம் போல அதாவது பட்டாம்பூச்சி போன்று கால்களை மடக்கிக்கொண்டு தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். இது உங்களது மனநிலையை ரிலாக்ஸ் செய்ய உதவும்.