அதிமுக கட்சியின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற உள்கட்சி பூசல் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என அவரது தொகுதி முழுவதும் ஓட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், எடப்பாடியினை தொடர்ந்து அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விகள் அதிகளவில் எழும்பி வருகின்றன. மேலும் இது தொடர்பாக கட்சியில் உள்கட்சி பூசல் நிலவிரும் நிலையில் தான் இன்று அடுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தான் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளதால், தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் போஸ்டரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ் போஸ்டர் கிழிப்பு
ஓ.பன்னீர் செல்வம் தான் அடுத்த முதல்வர் என ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழகம் முழுவதும் அதிமுக கட்சியினரிடையே சலசலப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில், தேனி பெரிய குளம் தென்கரையில் உள்ள ஓ.பிஎஸ் இல்லத்தின் அருகே ஓட்டப்பட்ட போஸ்டர் தற்போது கிழிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் ஆலோசனை
இந்த நிலையில் தான் தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து ஓ.பி.எஸ் இல்லத்தில் வைத்து அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைச்சர்களுடான சந்திப்பிற்கு பிறகு தான் அதிமுக உட்கட்சி அரசியல் தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.