தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுவரை 331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி :
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேதியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து கேரளாவிலும் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அசாமில் மார்ச் 27ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்த அவர், மே 2 ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
Read more – மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி : கமல்ஹாசன் உறுதி
இந்தநிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்களும், மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி, அசாமில் ரூ.63 கோடியே ரூ.75 லட்சம், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 5 கோடியே 72 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.