தமிழக சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடிகர் விவேக், பார்த்திபன் ட்வீட் செய்துள்ளனர்.
சென்னை :
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். இதையடுத்து, நாளை பொதுவிடுமுறையை அறிவித்த தமிழக அரசு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கவும் உத்தரவிட்டது. இதனால் வெளியூரில் இருந்து பல வாக்காளர்கள் சொந்த ஊர்களை நோக்கி படை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், வாக்களிக்கச் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் வீட்டுக்குள் வந்ததும் சோப் தண்ணீரில் கை கழுவுதல் அவசியம் என்று தான் பேசிய வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார்.
அதேபோல், இயக்குனர் பார்த்திபன் ” நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல… ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.