அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவை கிண்டலடிக்கும் விதமாக அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னமா தர்மகோலுடன் வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை :
அதிமுக சார்பில் பட்டியல் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 பேர் உள்ளடக்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த வாரம் 2 ம் கட்ட 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தநிலையில், மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ களமிறங்கிறார்.
அதே தொகுதியில், திமுக சார்பில் பெண் வேட்பாளர் சின்னம்மா செல்லூர் ராஜூக்கு எதிராக போட்டியிடுகிறார். இதையடுத்து, மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் சின்னம்மா கையில் தர்மகோலுடன் திமுக தொண்டர்கள் முன்னிலையில் வந்தார்.
Read more – இந்தி எதிர்ப்புக்கு எதிராக இளம் வயதில் போராடினேன் : மனமுறுகிய மு.க.ஸ்டாலின்
அந்த தர்மகோலில், தர்மாகோல் ராஜூவை துரத்தியடிப்போம்”, “கோமாளி – துக்ளக் ஊழல்வாதிகளை விரட்டியடிப்போம்”, “ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் வீழ்த்துவோம் என்ற வாசகங்களோடு சின்னம்மாள் வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.