கன்னியாகுமரிக்கு கிடைத்த மற்றொரு காமராஜர் நமது பொன். ராதாகிருஷ்ணன் என்று நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் போட்டியிடுகிறார். தொடர்ந்து, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தளவாய் சுந்தரம் களமிறங்கியுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஆதரவாக நடிகை நமீதா நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட போது கூறியதாவது;
உங்கள் தொகுதியில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன் இந்த மண்ணில் பிறந்தவர். உங்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி, மார்த்தாண்டம் மேம்பாலம், பார்வதிபுரத்தில் மேம்பாலம், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரட்டை ரயில் பாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இவர் கன்னியாகுமரிக்கு கிடைத்த மற்றொரு காமராஜர் என்று தெரிவித்தார்.
Read more – பெண்களை பற்றி தவறாக பேசினால் நாக்கு இருக்காது… திமுகவை எச்சரித்த ஆர்.பி.உதயகுமார்…
பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். கன்னியாகுமரியில் தாமரை வளர்ந்தால் தான் தமிழ்நாடு வளரும் என்று பிரச்சாரம் செய்தார்.