தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கடிதமளித்துள்ளார்.
கன்னியாகுமரி :
தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவித்த நிலையில் தேசிய கட்சிகள் முதல் பல கட்சிகள் வாக்குறுதிகளை கொடுத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் மிக முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு ஆதரவாக தனது கூட்டணி கட்சிகள் சார்பில் அமித் ஷா, ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தனர்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டும், கேரளாவில் மீனவ மக்களோடு கடலில் குதித்து மீன் பிடித்தார். தொடர்ந்து கன்னியாகுமரி தனியார் பள்ளி ஒன்றில் பிரச்சாரம் செய்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 05.03.2021!!!
தற்போது, ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு எல்.முருகன் கடிதம் அளித்துள்ளார். அந்த கடிதத்தில், மார்ச் 1 ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு பள்ளி வளாகத்தை பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிகளை ராகுல் காந்தி மீறியுள்ளார்.இதனால் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.