தமிழக மக்களுக்கு பாஜக என்றும் நண்பன் , திமுக காங்கிரஸ் ஆகியவை எதிரிகள் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் :
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கலந்துகொண்டு பேசியதாவது,
தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்காக ரூ.6 லட்சம் கோடியை பிரதமர் மோடி அளித்துள்ளார். தமிழகத்தின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டை மிருகவதை எனக்கூறி வழக்கு தொடுத்தது காங்கிரஸும், திமுகவும்தான்.
ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் ஜல்லிக்கட்டு கலாச்சாரம், பண்பாடு நிறைந்தது என மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உறுதுணையாக பிரதமர் மோடி இருந்தார் என்றும், தமிழக மக்களுக்கு பாஜகதான் நண்பன். காங்கிரஸும், திமுகவும் எதிரிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Read more – துரைமுருகன் கையில் இருந்த ஊழல் பத்திரம்.. இப்பொழுது அமித்ஷா பையில்…
பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள், 87 சதவீதம் வெளிச் சந்தையில் இருந்து இறக்குமதி செய்வதால்தான் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்று வழியாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, அவற்றின் உற்பத்திக்கு பிரதமர் மோடி திட்டம் வகுத்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.




