தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் பல்வேறு மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற மே 24 ம் தேதியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி முடிவடையும் நிலையில், தற்போது சட்டசபை தேர்தலுக்கான பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.
அதிமுக கட்சி சார்பில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்றும், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் தற்போது புதியதாக பரவி வரும் உருமாறிய கொரோனா காரணமாக சட்டசபை தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியது.
Read more – வேளாண் சட்டங்கள் குறித்து இன்று சாதகமான தீர்வு எட்டப்படும் : வேளாண்துறை அமைச்சர் நம்பிக்கை
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்பது குறித்து இதுவரை எந்தவொரு முடிவு எடுக்கப்படவில்லை என்றார். மேலும், திட்டமிட்டபடி ஜனவரி 20 ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.