கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழலை கட்டி இழுத்தவர்கள் திமுக என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் :
வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் என்பதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகளை குறை கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. இந்த ஊழலை மறைக்க தான் அதிமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றசாட்டு செய்து வருகிறார். முதலமைச்சர் உதவி மையத்திற்கு போன் செய்து புகார் அளித்தால் அதிகாரிகள் நேரடியாக வந்து குறையை தீர்த்து வைப்பார்கள். மக்கள் நினைப்பதை அதிமுக அரசு நிறைவேற்றுகிறது என்றார்.
Read more – வராத மழைக்கு வானிலை போல தான், திமுகவின் தேர்தல் நிலை : நடிகை விந்தியா
மேலும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆகவும் முடியாது மனு வாங்கி போட்ட பெட்டியை திறக்கவும் முடியாது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் வாங்கிய மனு எங்கே, தொடர்ந்து மக்களை ஏமாற்றிவருகிறார். மு.க.ஸ்டாலின் ப்ளான் போட்டு மக்களை மயக்கி வாக்குகள் பெற முயற்சிக்கிறார் ஆனால் அது நடக்கவே நடக்காது என்று குற்றம் சாட்டியுள்ளார்.




