இயக்குனர் சமுத்திரக்கனி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்த நிலையில் இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பல திரைபிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும், தாங்கள் வாக்களித்ததற்கு ஆதாரமாக இடது கையில் பதிக்கப்பட்ட மையின் புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்தநிலையில், சமூக கருத்துக்களை பேசும் பல திரை துறையினர் வாக்களிக்கவில்லை என்று கடும் விமர்சனம் எழுந்தது. அந்த வரிசையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், நவரச நாயகன் கார்த்திக், இளையராஜா, யுவன் போன்றவர்கள் வரிசையின் சமுத்திரக்கனியின் பெயரும் இடம் பெற்றது.
Read more – கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை அடைக்க முடிவு… மதுரை மாநகராட்சி ஆணையர் உத்தரவு..
இதையடுத்து, இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த இயக்குனர் சமுத்திரக்கனி வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், தான் மற்றும் தனது மனைவியும் காலை முதல் ஆளாக சென்று வாக்குச்சாவடியில் வாக்கு எந்திர கோளாறு காரணமாக 45 நிமிடங்கள் காத்திருந்து வாக்களித்தோம் என்றும், ஜனநாயக கடமையை நிறைவேற்றியதை நான் தான் பெருமை படுத்திக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.