திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மக்கள் நேய மனிதகட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக கட்சி பாமக-வுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில் பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடுவதில் இழுபறி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக-வும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையை நேற்று நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நேய மனித கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.