கார்ப்பரேட் முதலாளிகள் வருவதற்குள் எனது ஆட்சி வந்துவிட வேண்டும் என்று துடிக்கிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆட்சியில் அமர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ற ஒற்றை முழக்கத்துடன் மக்களின் மனதை கவர புதிய புதிய வாக்குறுதிகளை வேட்பாளர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்தநிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு மேய்பவர்களுக்கு அரசு பணி என்று தெரிவித்தோம். அப்போழுது எங்களை பார்த்து சிரித்த திமுக, அதிமுக கட்சிகள். இன்று ஆடு, மாடு வளர்ப்பவர்களுக்கு மானியம் கொடுக்கிறது. என்னிடம் எப்படி சம்பளம் கொடுப்பேன் கேட்ட ஆட்சியாளர்களிடம் இப்பொழுது நான் கேட்கிறேன். எப்படி மானியம் கொடுப்பீர்கள்.
இதேபோல், பள்ளிக்கூடம் பிள்ளைகளுக்கு பால் கொடுப்பேன் என்று பெருமையாய் பேசுபவர்களே. உங்கள் ஆட்சியில் மட்டும் குழாய்யை திறந்தால் பால் வந்துவிடுமா? அதற்கு மாடு வளர்ப்பு மிக அவசியம் என்று தெரிவித்தார்.
Read more – கையில டார்ச் இருக்கு… பீஸ் எங்க… மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் மறந்து போன மொமண்ட்…
மேலும், கார்ப்பரேட் முதலாளி வருவதற்குள் என்னுடைய கவர்மெண்ட் வந்து விட வேண்டும் என்று நான் துடிக்கிறேன். அதற்கும் காரணம் இருக்கிறது. அவர்கள் வந்தால் நாடு நாசமாகிவிடும். எனக்கு உயிர் தேவையாக இருக்கும் உணவை இயற்கை உரத்தின் மூலம் விளைய வைத்து விவசாயிகளின் வாழ்வை விடிய செய்வேன். நான் நிச்சயம் ஆட்சிக்கு வந்து இவர்களை திருப்பி அடிப்பேன். எனது திட்டத்தையே இந்த திமுக மற்றும் அதிமுக அரசுகள் கட் , காப்பி, பேஸ்ட் செய்து விடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.




