மதுரை தெற்கு தொகுதியில் நான் நான் வெற்றி பெற்றால் நிலவுக்கு பயணம், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் என்று சுயேட்சை வேட்பாளர் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் துலாம் சரவணன் என்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சமீபத்தில் தான் வெற்றி பெற்றால் சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தார். அந்த துண்டு பிரச்சாரமானது பலரது கவனத்தை ஈர்த்து, திரும்பியும் பார்க்க செய்துள்ளது. அதில் அனைவருக்கும் ஆப்பிள் ஐபோன், வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாய் செலுத்தப்படும். பெண்களுக்கு 100 சவரன் தங்க நகை வழங்கப்படும், நிலாவுக்கு சுற்றுலா பயணமாக 100 நாட்கள், வீட்டுக்கு ஒரு சிறிய வகை ஹெலிகாப்டர் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய 3 மாடி கட்டிடம் என்று கூறப்பட்டிருந்தது.
Read more – பழனியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தற்போது, அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வரும் வேளையில் துலாம் சரணவன் இப்படி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளை ஆட்டம் காண செய்துள்ளது.