கமல் உதட்டளவிலும், உதடுகளுக்கு மட்டுமே சேவை செய்ய கூடியவர் என்று வானதி ஸ்ரீனிவாசன் கருத்துக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டபோது, பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனை பார்த்து துக்கடா அரசியல்வாதிகளிடம் அப்பறம் பேசிக்கொள்கிறேன். முதலில் பாரத பிரதமர் என்னுடன் விவாதம் செய்யட்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த வானதி, உதட்டளவிலும், உதடுகளுக்கு மட்டுமே சேவை செய்ய கூடியவர் கமல்ஹாசன் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இந்த கருத்தானது தற்போது அனைவருக்கும் முகம் சுழிக்கும்படியாகி விட்டது.
Read more – இன்றைய ராசிபலன் 01.04.2021!!!
இந்தநிலையில், இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கடுமையான பதிலை வழங்கினார். அதில், “வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது” என தெரிவித்துள்ளார்.