கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட்ட வாக்குச்சாவடிகளுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிட்டனர். இதனால் யாரு வெற்றி பெறுவார்கள் என்று பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில், நேற்று காலை சென்னை ஆழ்வார் பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கை பதிவு செய்து விட்டு தனி விமானம் மூலம் கோவைக்கு சென்று தெற்கு தொகுதியில் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன்பின் அவர் இரவில் கோவையிலேயே தங்கிய அவர், இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என ஆய்வு செய்தார்.