தமிழகம் முழுவதும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காரைக்குடி தொகுதி மநீம வேட்பாளர் டெல்லியில் போராட்டம் நடத்தினார்.
தமிழகம் முழுவதும் கடந்த 6 ம் தேதி 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி பிடித்தது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் இதுவரை 445 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், டெல்லி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முன்பு காரைக்குடி தொகுதி மநீம வேட்பாளர் ராசகுமார் கையில் பதாகை ஏந்தி தமிழகம் முழுவதும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்.
Read more – தமிழகத்தில் தொடங்கியது தடுப்பூசி திருவிழா… தினந்தோறும் 4 லட்சம் பேருக்கு செலுத்த திட்டம்..
அப்பொழுது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், ராசகுமாரிடம் உள்ள கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு உரிய அதிகாரியிடம் தாங்கள் இதை சமர்ப்பிப்பதாகக் கூறி அவரை சமாதானப்படுத்தினர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த காரைக்குடி தொகுதி மநீம வேட்பாளர் ராசகுமார் கூறியதாவது ; தமிழகத்தில் காணப்படும் முக்கிய கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்யததாகவும், இதையறிந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் இந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்தார்.