தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுக கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால் தான் தொகுதி முழுவதும் வன்முறையை தூண்டி விடுகிறது. கடந்த காலத்தில் பெண்களுக்கு எதிராக பல குற்றங்களை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால் பாஜக அப்படிஇல்லை. பெண்களுக்கு தொடர்ந்து பா.ஜ.கவில் அதிகாரம் வழங்கப்படுகிறது. நாட்டின் உயர்ந்த பதவிகளில் பெண்களை அமர்த்தி அழகு பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.
Read more – சிறுமிக்கு தப்பு எது, சரி எதுன்னு சொல்லுங்க…. தப்பா வளர்த்திருக்கீங்க… பெற்றோரிடம் கோவப்பட்ட விஜயபாஸ்கர்
மேலும், பெண்களுக்கான நலன், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் பாஜக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதனால் பெண்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் எனக்கு வாக்கு அளிக்க வேண்டும். இந்த தேர்தலில் நான் பெறப்போகும் வெற்றி என்னுடையது மட்டுமல்ல. ஒட்டுமொத்த பெண்களின் வெற்றியாக கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.