சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்.
சென்னை :
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார். அவர்களுடன் இந்திய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரவிபாபுவும் உடனிருந்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், நல்ல எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலை சந்தித்து பேசினேன். கூட்டணி குறித்து கமல்ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன். யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியே எங்களது இலக்கு என்று தெரிவித்தார்.
Read more – சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு ; திமுக மாநில மாநாடு ஒத்திவைப்பு
மேலும், பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள். எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படும். காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்.நான் ஒரு பத்தாண்டு காலம் அதிமுகவுடன் பயணித்துள்ளேன். அதிமுகவில் இருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன் என்றும் தெரிவித்துள்ளார்.