அதிமுக கட்சிக்காக ஸ்டாலின் இலவசமாக பிரச்சாரம் செய்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் சுழற்சி மூலம் ‘உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்’ என்ற முழக்கத்தில் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், இவர் தொடர்ந்து ஆளும் அதிமுக அரசிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தும், பல்வேறு விமர்சனங்களையும் முன்வைக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்பட அனைவரும் அதிமுக அரசை விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Read more – ஓட்டுக்காக வேல் எடுத்தவர்கள், தோற்று தான் போவார்கள் : மறைமுகமாக திமுகவை சாடும் ஜி.கே.வாசன்
இந்தநிலையில், இதுகுறித்து அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். அதில், மு.க.ஸ்டாலின் எங்கு சென்றாலும், 30 நிமிடங்கள் பேசினாலும் கூட அதில் 20 நிமிடங்களுக்கு மேல் அதிமுக அரசு பற்றி பேசுகிறார், அதிமுக அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தி அதிமுகவிற்காக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.