இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று வந்த ஒரே சுகாதார அமைச்சர் நான் மட்டும் தான் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விராலிமலை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்தநிலையில், பிரச்சாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விராலிமலை தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட விஜயபாஸ்கர், நான் கடந்த பத்து ஆண்டுகளாக விராலிமலை மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் கடினமாக உழைத்தேன். உங்கள் எந்தவொரு இடையூறு வந்ததும் இல்லை. நான் வரவிட்டதும் இல்லை. எனக்காக பிரச்சாரம் செய்த எனது ஒன்பது வயது மகளையும் பேசவிடாமல் தடுத்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
Read more – உதட்டளவில் மட்டுமே அவர் செய்த சேவை.. இனி இந்த நாட்டிற்கு தேவையா ? கமல் மீது வானதி ஸ்ரீனிவாசன் கடும் தாக்கு
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்குள் சென்று வந்த ஒரே சுகாதார அமைச்சர் நான் மட்டும் தான். நான் இவ்வளவு கடினமாக உழைத்ததற்கும் நீங்கள் தான் காரணம். இந்த சட்டமன்ற தேர்தலிலும் விராலிமலை தொகுதி எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறினார்.




