சுற்றுச்சூழல் நலன் பற்றி பேசும் ஒரே கட்சி என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பேட்டியளித்தார்.
சேலம் :
சுற்றுச்சூழலை பற்றிய புதிய திட்டங்கள் எங்களிடம் உள்ளன என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சேலத்தில் பேட்டியளித்தார். சுற்றுச்சூழலை பற்றி பேசும் ஓரே கட்சி நாங்கள் தான் என கூறினார். நீர்நிலைகளை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும் என கூறினார். தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மதுரையில் முதல் கட்டமாக தொடங்கினார். அதன்பிறகு பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் நேற்று 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை சேலத்தில் தொடங்கினார். சுற்றுச்சூழல் நலன் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்தான் எனக் கூறியுள்ள கமல்ஹாசன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 7 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய வாக்குறுதிகள் :
சுழற்சி பொருளாதாரத்தை நிறுவுதல்
மாசுபாட்டின் தரங்களை கண்காணித்தல் மற்றும் செயல்படுத்துதல்
கடுமையான நிலத்தடி நீர் கட்டுப்பாடு
மாநிலம் தழுவிய சுற்றுசூழல் நிலப்படம் உருவாக்கப்படும்.
நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் முன்னேற்றம்.
உள்ளூர் மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.
உயிர்ச்சூழல் அமைப்புகள் பாதுகாப்பு
Read more – தமிழக ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை : தமிழக உணவுத்துறை அறிவிப்பு
தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், சேலம் குரங்குசாவடி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது; தமிழகத்தில் அகற்றப்படாத குப்பைகள், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றால் சுற்றுச்சூழல் சூழல் கடுமையாக மாசுபட்டிருப்பதாகக் கூறினார். காப்பி அடிப்பவர்கள் இருப்பதால், ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற உள்ள திட்டங்களை விளக்கிச் சொல்லப்போவதில்லை என கமல்ஹாசன் குறிப்பிட்டார். நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசால் அரசுக்கு செலவு மக்களுக்கு வருவாய் என்பதைத் தாண்டி, அதன் மூலம் எந்த மாற்றமும் வாரது என மக்கள் நீதி மையம் தலைவர் கூறினார். சுற்றுச்சூழலை பற்றி பேசும் ஓரே கட்சி நாங்கள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.