மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிகப்படியான வேட்புமனு தாக்கல் இன்று தமிழகத்தில் பதிவாகவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். மேலும், மக்கள் நீதி மய்யத்தின் வேளச்சேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் மனுதாக்கலும் செய்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 19.03.2021!!!
தற்போது, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது; டிஜிட்டல் முறையில் தன்னுடைய பிரச்சாரம் இருக்கும். எனது சார்பாக மக்கள் நீதி மய்ய அதிகாரிகள் வேளச்சேரி தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பார்கள். மக்கள் நீதி மய்யத்திற்கு பொது மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தார்.




