மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம் என்று அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இன்று மடிப்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது ;
திமுகவை கமல்ஹாசன் ஒரு போதும் விமர்சனம் செய்வதில்லை என்று கருத்து தொடர்ந்து என் காதுகளில் விழுகிறது. நான் யாரையும் பாரபட்சம் பார்த்து விமர்சனம் செய்யவில்லை. தற்போது நிகழும் அரசியல் சூழலையே இங்கு வெளிப்படுத்தி வருகிறேன் என்றார்.
Read more – அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் : இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்
மேலும், திமுக வந்தது எப்படி காலத்தின் கட்டாயமோ, அதுபோல் வெளியே போக வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம். அதுபோல, மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதும் காலத்தின் கட்டாயம் தான் என்று தெரிவித்துள்ளார்.