பாஜக தேர்தல் விளம்பரத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி படம் இடம்பெற்று இருந்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாஜக சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் விளம்பரம் ஒன்றில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதியின் புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த புகைப்படக்காட்சியானது 10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ ஆல்பம் பாடலில் இருந்த ஸ்ரீநிதி நடனமாடிய புகைப்பட காட்சிகள் ஆகும்.
Read more – ஆ. ராசாக்கு நோட்டீஸை பறக்கவிட்ட தேர்தல் ஆணையம் : அவதூறு தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கமளிக்க உத்தரவு
தற்போது, இந்த புகைப்படம் ஒப்பீடு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப்படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றுமே மலராது என்று கூறியிருக்கிறார்.