முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் எங்கள் எதிரி அல்ல, எங்களுக்கு ஒரே எதிரி என்றும் திமுக தான் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
சசிகலா வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் வரும் என்று மக்களால் எதிர்பார்க்க படுகிறது. மேலும், தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சி கூட்டணி குறித்த பேச்சுகளும் சூடுப்பிடிக்கிறது.
இந்தநிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது : அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது ஆச்சரியமாக உள்ளது. அதிமுக கட்சிக்காக உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன் தான் வருவார்கள்.
தட்சணாமூர்த்தி, சம்பங்கி போல் உண்மைக்காக போராடக்கூடியவர்கள் அ.தி.மு.க.வில் நிறையபேர் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள் அவர்கள் விரைவில் எங்கள் பக்கம் வருவார்கள் என்றார்.
Read more – ஆகவே அளந்து பேசுங்க.. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. உதயநிதியை எச்சரிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மேலும், அதிமுக தலைமை செயலகம் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் செல்ல சசிகலா விரைவில் ஒரு நல் முடிவை எடுப்பார். சசிகலா சென்னையில் நுழைந்தபோது அவரது கார் பல இடங்களில் முடக்கப்பட்டது, இருந்தும் அதிமுக கொடியுடன் காரில் பயணித்து வெற்றி கொண்டோம்.
எங்களை பொறுத்தவரை முதல்வர், துணை முதல்வர் எங்களது எதிரி அல்ல, எங்களுக்கு ஒரே எதிரி என்றும் திமுக தான். அ.ம.மு.க. கட்சி தொடங்கப்பட்டதே அ.தி.மு.க.வை மீட்க தான். அ.தி.மு.க.வை மீட்ட பின்பு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆகியோர் அ.தி.மு.க.வில் தொடர்வார்களா என்பது குறித்து அப்பொழுது பேசுவோம் என்று தெரிவித்தார்.