கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மைக் வேலைசெய்யாததால் அவரது குழு மீது டார்ச்லைட்டை தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுவதால் தேர்தல் களம் வேகமெடுக்கிறது.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தீடிரென அவர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் மைக் வேலை செய்யாமல் போனது. இதனால் மக்கள் கமலை தொடர்ந்து பேசும்படி வலியுறுத்தினர். கமல்ஹாசனிடம் எவ்வளவோ முறை எடுத்து சொல்லியும் பொதுமக்கள் கேட்டபாடில்லை. எவ்வள்வு முயற்சி செய்தும் மைக்கும் வேலை செய்யவில்லை.
Read more – 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : நாடுமுழுவதும் இன்று முதல் தொடக்கம்
இதனால் கடுப்பான கமல்ஹாசன் தான் மற்றொரு கையில் வைத்திருந்த அவரது சின்னமான டார்ச்லைட்டை அவர்களின் குழு மீது தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிமிசத்திற்கு நிமிஷம் தமிழகத்தில் மாற்று அரசியல் வேண்டும், பிற கட்சிகளை போல மேலிடத்தில் உள்ளவர்கள் கீழ் இருப்பவர்களை வஞ்சிக்கமாட்டோம் என்று பேசும் கமல். தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து மாற்றிவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. தெரியாமல் நடந்த தகவல் தொழிநுட்ப கோளாறுக்கு பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்.