எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை “கூட்டணி” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு :
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளநிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி பூத் முகவர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணிதான் என்றார். தனித்து போட்டியிடுவது நமக்கு ஒன்றும் புதிதானது இல்லை என்றும், தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றவாகவே தே.மு.தி.க தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Read more – சச்சின் மற்ற துறைகளை பற்றி பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் : தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கருத்து
தொடர்ந்து பேசிய அவர் அ.தி.மு.க தலைக்கு மேல் பெரிய கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என்று சசிகலாவின் வருகை குறித்து மறைமுகமாக தெரிவித்தார்.




