மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 21 ம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற மிகப்பெரிய ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் தேர்தல் என்பதால் தேர்தல் களம் தொடர்ந்து சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் மே மாதம் 24 ம் தேதி முடிவடைய உள்ளதால் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுக கட்சி முதல் வியூகத்தை அமைத்தது. அதன்படி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 24 ம் தேதி விண்ணப்ப மனு அளிக்கலாம் என்று முதல்வர், துணை முதல்வர் அறிவித்தனர்.
Read more – இன்றைய ராசிபலன் 16.02.2021!!!
தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 21 ம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாகர்கோவில் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என்றும், ஒரு தொகுதிக்கு ஒரு முறைவிண்ணப்பிக்க ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.




